Tuesday, April 6, 2010

இ‌ங்‌கிலா‌ந்‌தி‌ல் ‌விசா க‌ட்டு‌ப்பாடு : வெளிநாட்டவர்கள் கவலை.

இ‌ங்‌கிலா‌ந்‌தி‌ல் இ‌ன்று முத‌ல் நடைமுறை‌க்கு வரு‌ம் பு‌திய ‌விசா முறைகளா‌ல், அ‌ந்நா‌ட்டி‌ற்கு‌ச் செ‌ன்று ப‌ணியா‌ற்று‌ம் இ‌ந்‌திய‌ர்களு‌க்கு ‌சி‌க்க‌ல் ஏ‌ற்படு‌ம் எ‌ன்று தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது. வெ‌ளிநா‌ட்டு ‌நிறுவன‌ங்க‌ள் ப‌ணி ‌நி‌மி‌த்தமாக இ‌ங்‌கிலா‌ந்‌தி‌ல் உ‌ள்ள த‌ங்க‌ள் வெ‌ளிநா‌ட்டினரை அனு‌ப்பு‌ம் போது மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டிய நடைமுறைக‌ளி‌ல் இ‌ங்‌கிலா‌ந்து அரசு பு‌திய மா‌ற்ற‌ங்களை அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

அத‌ன்படி, இ‌ங்‌கிலா‌ந்‌தி‌ற்கு வ‌ந்து ப‌ணியா‌ற்று‌ம் வெ‌ளிநா‌ட்டினரு‌க்கு‌ம், உ‌ள்நா‌ட்டை‌ச் சே‌ர்‌ந்த ஊ‌‌‌ழிய‌ர்களு‌க்கு இணையாக ச‌ம்பள‌ம் அ‌ளி‌க்க வே‌ண்டு‌ம். இ‌ங்‌கிலா‌ந்து ரூபாயான பவு‌ண்டி‌ல் ம‌ட்டுமே ச‌ம்பள‌ம் அ‌ளி‌க்க வே‌ண்டு‌ம். அடு‌த்ததாக, ப‌ணி மாறுத‌லி‌ல் இ‌ங்‌கிலா‌ந்து வரு‌ம் வெ‌ளிநா‌ட்டினரு‌க்கு இ‌னி ‌நிர‌ந்தர‌க் குடியு‌ரிமை அ‌ளி‌க்க‌ப்பட மா‌ட்டாது எ‌ன்று பு‌திய பல க‌ட்டு‌ப்பாடுகளை ‌வி‌தி‌த்து‌ள்ளது. இ‌ந்த பு‌திய ‌விசா ‌வி‌திமுறைக‌ள் இ‌ன்று முத‌ல் நடைமுறை‌க்கு வரு‌ம் எ‌ன்று‌ம் இ‌ங்‌கிலா‌ந்து அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இதனா‌ல் இ‌ந்‌தியா‌வி‌ல் இரு‌ந்து இ‌ங்‌கிலா‌ந்து செ‌ல்வோ‌ர் குறைய வா‌ய்‌ப்‌பிரு‌ப்பதாக குடியு‌ரிமை ‌நிபுண‌ர்களு‌ம் கரு‌த்து‌த் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com