கட்சிகள் தமது தேசியப்பட்டியல் எம்பிக்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது.
ஏழாவது பாராளுமன்றுக்கான 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 196 பேர் தேர்தலில் நேரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய 29 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களையும் கட்சிகள் வெளியிட்டுள்ளது. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 17 தேசியப் பட்டியில் உறுப்பினர்களையும் , ஐக்கிய தேசியக் முன்னணி 9 தேசியப்பட்டியல் உறுப்பினர்களையும், ஜெனரல் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணி 2 தேசியப்பட்டியல் உறுப்பினர்களையும் , தமிழரசுக்கட்சி 1 தேசியப்பட்டியல் உறுப்பினரையும் பெற்றுக் கொண்டுள்ளது. அதனடிப்படையில் கட்சிகள் வெளியிட்டுள்ள தமது உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் கீழே.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 17 ஆசனங்கள்
ரட்ண சிறி விக்ரமநாயக்க
டி.எம்.ஜெயரட்ண
டலஸ் அழகபெரும
ஜி.எல்.பீரிஸ்
டி.ஈ.டபள்யூ. குணசேகர
திஸ்ஸ விதாரண
கீதாஞ்சலி குணரத்தன
எல்லாவெல மேதானந்த தேரோ
முத்து சிவலிங்கம்
அச்சல சுரங்கயாகொட
விநாயகமூர்த்தி முரளிதரன்
ஜே.ஆர்.பி.சூரியபெரும
ஜனக பிரியந்த பண்டார
ரஜீவ விஜியசிங்க
ஏ.எச்.எம்.அஸ்வர்
மாலினி பொன்சேகா
கமலா ரணதுங்க
ஐக்கிய தேசியக் முன்னணி 9 ஆசனங்கள்
திஸ்ஸ அத்தநாயக்க
ஜோசப் மைக்கல் பெரேரா
ஹெரான் விக்ரமரட்ண
ஹர்சத் சில்வா
டி.எம்.சுவாமிநாதன்
யோகராஜன்
அநும கமஹே
மொஹமட் தம்பி ஹசன் அலி
அஸ்லாம் மொஹமட் சலீம் மொஹமட்
ஜனநாயக தேசிய முன்னணியின் 2 ஆசனங்கள்
அனுர திஸாநாயக்க
டிரான் அலஸ்
இலங்கை தமிரசுக் கட்சி 1 ஆசனம்
எம் சுமந்திரன்
0 comments :
Post a Comment