இராணுவ - சிவில் நீதிமன்றங்கள் மோதுகின்றன.
ஜெனரல் பொன்சேகா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கென நியமிக்கப்பட்ட இரண்டாவது நீதிமன்றின் நீதிபதிகள் தொடர்பாக உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கினை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் மே மாதம் 3 ஆம் தேதி அடுத்த விசாரணைகள் நடைபெறும். அதுவரை சரத் பொன்சேகா தொடர்பான எந்தவித விசாரணைகளும் இராணுவ நீதிமன்றத்தில் நடைபெறக்கூடாது என உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று நாட்டின் ஜனாதிபதியினால் மேற்படி இராண்டாவது இராணுவ நீதிமன்றுக்காக நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் நாளை இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் சிவில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு முரணாக இலங்கை இராணுவ நீதிமன்றம் செயற்படுவதாக குற்றஞ் சுமத்தியுள்ள ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐனநாயக தேசிய முன்னணியின் முக்கியஸ்தருமான அநுரகுமார திஸ்ஸநாயக்க கூறியதாவது:
உச்ச நீதிமன்றின் உத்தரவையும் மீறி நாளை பொன்சேகா இராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரிக்கப்படவுள்ளார். இவ்வாறு நடைபெற்றால் சிவில் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். எனவே இராணுவ நீதிமன்றத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம் எனவும் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment