தீவிரவாதிகளின் கைக்கு அணுவாயுதங்கள் செல்லாமல் பாதுகாப்பது உலகின் பொறுப்பு. ஒபாமா
அணு ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்கு சென்று விடாமல் இருக்க உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார். அணு சக்தி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், வாஷிங்டனில் அந்நாட்டு அதிபர் ஒபாமாவை இன்று காலை சந்தித்து பேசினார்.
இந்தி சந்திப்பு பின்னர் பேசிய ஒபாமா, பயங்கர அணுஆயுதங்கள் அல் கெய்தா போன்ற தீவிரவாதிகளின் கைகளில் சென்றுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உலக நாடுகளின் கடமை என்றார்.
பிரதமர் மன்மோகன் சிங்கை தொடர்ந்து அதிபர் ஒபாமாவை பாகிஸ்தான் பிரதமர் கிலானி சந்தித்து பேசினார். அப்போது, இந்தியாவை போல் பாகிஸ்தானுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டும் என்று கிலானி கேட்டுக் கொண்டார்.
அதற்கு மும்பை தாக்குதல் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் அரசு முன்வர வேண்டும் என்று ஒபாமா வலியுறுத்தியதாக தெரிகிறது.
விசாரணை நடத்த இந்திய அதிகாரிகளுக்கு ஒபாமா அனுமதி
தீவிரவாதி ஹெட்லியிடம் விசாரணை நடத்த இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா உறுதி அளித்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.
அணு சக்தி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், வாஷிங்டனில் அந்நாட்டு அதிபர் ஒபாமாவை இன்று காலை சந்தித்து பேசியபோது அமெரிக்க சிறையில் உள்ள தீவிரவாதி ஹெட்லியிடம் விசாரணை நடத்த இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று ஒபாமாவிடம் மன்மோகன் சிங் வலியுறுத்தியதாக தெரிகிறது.
இதற்கு ஒபாமா ஒப்புதல் அளித்திருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கு அமெரிக்க வழங்கி வரும் ஆயுதங்களை அந்நாடு இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த வாய்ப்புள்ளதை பிரதமர் மன்மோகன் சிங், ஒபாமாவிடம் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இந்தியா ஆற்றி வரும் அமைதிப்பணிகள், அணுசக்தி பாதுகாப்புக்காக இந்திய நாடாளுமன்றத்தில் விரைவில் கொண்டு வரப்பட உள்ள மசோதா குறித்தும் பிரதமர் மன்மோகன் சிங், ஒபாமாவிடம் விளக்கியுள்ளார்.
0 comments :
Post a Comment