Wednesday, April 28, 2010

இலங்கையில் செனட்சபை

மிகவிரைவில் செனட் சபையொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது இரண்டாவது பதவி காலத்திற்கான சத்தியபிரமாணத்தை மேற்கொள்வதற்கு முன்னர், அரசியலமைப்பு சீர்திருத்தம் மேற்கொள்ளும் தருணத்திலேயே செனட் சபையையும் அமைக்கப்படவுள்ளது. அனைத்து இனத்தவரும் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் வகையில் மாகாண சபைகளின் ஊடாக இதற்கான உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

இனம் மற்றும் மதம் தொடர்பான விடயங்கள் குறித்து ஏதேனும் சட்டமூலமொன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்படவேண்டுமாயின் அதற்கு செனட் சபையின் அனுமதி அத்தியாவசியமாக்கப்படவுள்ளது. அத்துடன் செனட் சபையின் பெரும்பான்மை அதிகாரம் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது என அமைச்சர் குறி;ப்பிட்டுள்ளார். இது பல்வேறு இனத்தவர்களினதும், மதத்தினரதும் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

1 comments :

Anonymous ,  April 28, 2010 at 8:40 PM  

It's really a wonderful idea to set a Senate council.The senate system was abolished during the past,without
no proper idea or motivation.IT was really a disaster for a true democratic country.However we are very pleased to have a senate council with highly qualified academics,professionals etc etc.We welcome towards your move to a senate council.Thank you Hon.Minister.Rajitha Senaratne

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com