அலவாங்கினால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் பலி
கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹலாகம பிரதேசத்தில் எம். யூ. வீரரட்ண எனும் 42 வயது நிரம்பிய குடும்பஸ்தர் அலவாங்கினால் தாக்கப்பட்ட நிலையில் மரணமானார். சனிக்கிழமை இரவு இடம்பெற்ற சம்பவத்தின் போதே மேற்படி நபர் பலியானார் என கம்பளை பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தன் மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததை நீண்ட நாட்கள் அறிந்துவைத்திருந்த கணவன், தன் மனைவியும், கள்ளக் காதலனும் சந்திக்கச் சென்றபோது பார்த்திருந்து அலவாங்கினால் கள்ளக் காதலனை அடித்துக் கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலையாளி என சந்தேகிக் கப்படும் நபரை கம்பளை பொலி ஸார் கைதுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.
0 comments :
Post a Comment