நிபுணர்கள் குழு நியமனத்தை நிறுத்தவும் - இலங்கை
யுத்த காலத்தில் இடம்பெற்றதாக சுமத்தப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிகப்படவுள்ள நிபுணர்கள் குழுவை நியமிக்க வேண்டாம் என இலங்கை மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.
சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸினால் இறுதியாக இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகளின் செயலாளரை சந்தித்த போது மொஹான் பீரிஸ் இதனைக் கோரியுள்ளார். ஐ.நா பொதுச் செயலாளருக்கும் இலங்கையின் சட்ட மா அதிபருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றதாக ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் மார்டீன் நெசர்கீ தெரிவித்துள்ளார், எனினும் எவ்வாறான தகவல்கள் வெளியிடப்பட்டன என்பது குறித்து தெரிவிக்கவில்லை.
ஐக்கிய நாடுகளின் இலங்கைப் பிரதிநிதி பாலித கொஹணேவுடன், நிபுணர்கள் குழு நியமனம் குறித்து பல சந்தர்ப்பத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த ஆணைக்குழுவின் அறிக்கை இந்த மாத இறுதியில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்டுகிறது.
0 comments :
Post a Comment