Monday, April 19, 2010

அமெ‌ரி‌க்கா ஒரு அணுஆயுத ‌கி‌ரி‌மி‌ன‌ல் நாடு: ஈரா‌ன்

''அமெ‌ரி‌க்கா ஒரு அணுஆயுத ‌கி‌ரி‌மி‌ன‌ல் நாடு'' எ‌ன்று ஈரா‌ன் கடுமையாக ‌விம‌ர்‌‌சி‌த்து‌ள்ளது. அமெ‌ரி‌க்கா‌வி‌ல் நடைபெ‌ற்ற அணுச‌க்‌தி மாநா‌ட்டி‌ற்கு போ‌ட்டியாக ஈரா‌னி‌ல் அணுபாதுகா‌ப்பு மாநாடு நடைபெ‌ற்றது. மாநா‌ட்டி‌ல் ஈரா‌ன் மத‌த்தலைவ‌ர் எழு‌திய அ‌றி‌க்கை ஒ‌ன்று வா‌சி‌க்க‌ப்ப‌ட்டது. அத‌ி‌‌ல், அமெ‌ரி‌க்கா ‌த‌‌ங்க‌ள் நா‌ட்டி‌ல் உ‌ள்ள அணுஆயுத‌ங்களை அ‌ழி‌க்காம‌ல் ‌பிற நாடுகளை ‌மிர‌ட்டுவது கே‌லி‌க்கூ‌ரியது எ‌ன்று ‌விம‌ர்‌‌சி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

அணுஆயுத‌‌ங்களை ‌மி‌க‌ப்பெ‌ரிய அள‌வி‌ல் சே‌‌‌மி‌த்து வை‌த்‌திரு‌க்கு‌ம் அமெ‌ரி‌க்கா, ‌தீ‌விரவா‌த‌த்தை ஒ‌ழி‌ப்பதாகவு‌ம், உலக அமை‌தி‌க்கு பாடுபடுவதாகவு‌ம் கூ‌றி‌க் கொ‌ள்வது அத‌ன் இர‌ட்டை வேட‌த்தை கா‌ட்டுவதாக தெ‌ரி‌‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இத‌னிடையே டெ‌க்ரா‌னி‌ல் நடைபெ‌ற்ற இராணுவ அ‌ணிவகு‌ப்பை அ‌திப‌ர் அமகது ‌நிஜா‌ம் பா‌ர்வை‌யி‌ட்டா‌ர். அணுஆயுத‌ங்களை சும‌ந்து செ‌ன்று இல‌க்குகளை தா‌க்கு‌ம் ஷோக‌‌ப் 3 ரா‌க்கெ‌ட்டுகளு‌ம் அ‌ணி‌வகு‌ப்‌பி‌ல் இட‌ம் பெ‌ற்றன.

ஈரா‌ன் ‌மீது போ‌ர் தொடு‌க்க ‌நினை‌ப்பவ‌ர்களு‌க்கு த‌கு‌ந்த ப‌‌திலடி கொடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று அ‌திப‌ர் அகமது ‌நிஜா‌ம் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளா‌ர். அ‌ண்டை நாடான இ‌ஸ்ரேலு‌க்கு ஆதரவு அ‌ளி‌ப்பத‌ன்மூல‌ம் ம‌த்‌திய ‌கிழ‌க்கு நாடுக‌ளி‌ல் அமெ‌ரி‌க்கா ஆயுத‌ப் போ‌ட்டியை ஏ‌ற்படு‌த்த‌ி வருவதாகவு‌ம் அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

ஈரா‌‌க், ஆ‌‌ப்கா‌னி‌‌ஸ்தா‌ன் போ‌ன்ற நாடுக‌ளி‌ன் உ‌‌ள்‌விவகார‌ங்க‌ளி‌ல் தலை‌யி‌ட்ட‌தி‌‌ன் பலனை அமெ‌ரி‌க்கா அனுப‌வி‌த்து வருவதாகவு‌ம் அமகது ‌நிஜா‌ம் தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com