மனித உரிமைகள் ஆணையகத்தின் தலையீட்டை நாடுகின்றார் அனோமா.
இராணுவத் தடுப்புக்காவலில் சுவீனமடைந்துள்ளதாக கூறப்படும் ஜெனரல் பொன்சேகாவிற்கு உரிய வைத்திய வசதிகள் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்வதற்கு மனித உரிமைகள் ஆணையகத்தின் தலையீட்டை அனோமா பொன்சேகா நாடுவதாக செய்திகள் தெரிவிக்கின்றது.
தனது கணவனுக்கு உரிய வைத்திய வசதிகளும், வைத்தியர்களும் வழங்கப்படவில்லை எனவும், அவ்விடயத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழு தலையிடவேண்டும் எனவும் அவர் இன்று மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளதாக அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது.
அதே நேரம் ஜெனரல் பொன்சேகாவிற்கு தேவையான சகல வைத்திய வசதிகளும் வழங்கப்பட்டுவருவதாகவும், அதை தான் நேரடியாக கண்காணித்துவருவதாகவும் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment