அமிதாப்பச்சன் - ஜனாதிபதி சந்திப்பு.
ஜூன் 3,4,5ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்படக் கழக விருது விழாவைத் ஆரம்பித்து வைக்க கொழும்பு வந்துள்ள இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசியுள்ளார்.
சுமார் 45 நிமிடங்கள் நீடித்த அமிதாப் பச்சனுடனான ஜனாதிபதி ராஜபக்ச வினது சந்திப்பின்போது நீண்ட காலம் நடந்த உள்நாட்டுப் போர் முடிந்து இலங்கையில் அமைதி நிலவுகிறது என்றும், இலங்கையில் இயற்கை சூழ்ந்த அமைவிடங்களில் பாலிவுட் படப்பிடிப்புகளை நடத்த வருமாறு அமிதாப் பச்சனிடம் ஜனாதிபதி அழைப்பு விடுத்ததாகவும் தெரியவருகின்றது.
இந்தி திரையுலகம் (பாலிவுட்) ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் மிகப் பெரிய விழா, சர்வதேச இந்திய திரைப்படக் கழக விருது வழங்கு விழா என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment