மட்டக்களப்பு படுவான்கரை பஸ்சேவையினை ஆரம்பிக்குமாறு ஹிஸ்புல்பாஹ் கோரிக்கை!
மட்டக்களப்பு பஸ்சாலை ஊழியர்களின் வேலை பகிஸ்கரிப்பால் முற்றாக தடைப்பட்டுள்ள மட்டக்களப்பு படுவான்கரைப் பகுதி பஸ் சேவைகளை உடனடியாக மீள ஆரம்பிக்குமாறு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம், ஹிஸ்புல்பாஹ் இலங்கை மத்திய போக்குவரத்து சபையின் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த பஸ் சேவை துண்டிப்பினையடுத்து படுவான்கரைப் பகுதிகளுக்கான வவுணதீவு, கரவெட்டி, உன்னிச்சை ஆகிய பகுதியின் மக்கள் மட்டக்களப்பு நகரில் இருந்து தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச்செல்ல போக்குவரத்து வசதியின்றி பிரதான பஸ் நிலையத்தில் பல மணி நேரம் காத்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்பாஹ்விடம் முறையிட்டதையடுத்து, அவர் போக்குவரத்து சபையின் தலைவரை கொழும்பில் அதன் தலைமையகத்தில் சந்தித்து, குறித்த பஸ் சேவைகளை உடனடியாக மீள ஆரம்பிக்குமாறு கேட்டுள்ளதாக அரச ஊடகப்பிரிவுத் தகவல் தெரிவிக்கின்றது.
இதேவேளை இச் சந்திப்பின் போது மட்டக்களப்பு பஸ்சாலையின் ஊழியர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள வேலை பகிஸ்கரிப்பினை விரைவாக முடிவுக்கு கொண்டுவர ஆவனை செய்யுமாறும் மத்திய போக்குவரத்து சபையிடம் கேட்டுள்ளதாக அரச ஊடகப்பிரிவுத் தகவல் தெரிவிக்கின்றது.
0 comments :
Post a Comment