சுவிஸ் புளொட் கிளையைச் சேர்ந்த கலாமோகன் வன்னியில் தேர்தல் பிரச்சாரங்களில்.
எதிர்வரும் 8ம் திகதி இடம்பெறவுள்ள பொதுத்தேர்தல்களில் புளொட் எனப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினர் மட்டக்களப்பு, வன்னி, யாழ்பாணம் ஆகிய மாவட்டங்களில் தேர்தலில் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காக புளொட் அமைப்பின் வெளிநாட்டுக் கிளைகளிலிருந்து பலர் இலங்கை வந்தடைந்துள்ளனர்.
இவர்களில் ஜேர்மன் கிளையைச் சேர்ந்த ஜெகநாதன், கனடா கிளையைச் சேர்ந்த செல்வம், காண்டீபன், தயா சுவிஸ் கிளையைச் சேர்ந்த கலாமோகன் நோர்வே கிளையைச் சேர்ந்த ராஜா ஆகியோர் பிரதேச மக்களைச் சந்தித்து எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பாக புளொட் அமைப்பு பாராளுமன்றம் செல்லவேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்து வருவதாகவும் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment