சிறையில் நளினி அறையில் ரெய்ட்-செல்போன் பறிமுதல்
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் உள்ள நளினி அறையில் காவல்துறையினர் இன்று திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் யாருடன் பேசினார் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிறைத்துறை புகாரின் பேரில் பாகாயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தன்னை விடுவிக்கக் கோரி நளினி சட்டப் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
0 comments :
Post a Comment