Friday, April 30, 2010

ஆனையிறவில் உயிரிழந்த படைவீரர்களுக்கான நினைவுத்தூபியை கோத்தபாய திறந்து வைத்தார்.

ஆனையிறவு போரில் உயிரிழந்த படைவீரர்களின் நினைவாக இன்று நினைவுத்தூபி ஒன்று இன்று பாதுகப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்சவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரியா மற்றும் வன்னிப்போரில் பிரதான பங்காற்றிய பல உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

இத்தூபியை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ஊடகவியலாளர்களிடம் பேசிய கோட்டாபய ராஜபக்க்ஷ, எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரை போர் வீரர்கள் தினமாக கொண்டாடப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த தினமானது போரில் வெற்றியீட்டுவதற்காய் பாடுபட்டு உயிர் நீத்த மற்றும் உயிருடன் வாழும் வீரர்களுக்காய் கொண்டாடபடவுள்ளதாவும் இந்த நிகழ்வின் சிறப்பு நிகழ்வு மே மாதம் 20ஆம் திகதி காலிமுகத்திடல் கோலாகலமாக நடைபெறும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மேலும் வடபகுதியில் இராணுவத்தினரால் பாவனைக்குட்பட்டுத்தப்பட்டுள்ள தனியாருக்கு சொந்தமான காணிகள் வீடுகள் யாவும் விடுவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நேற்று முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் சகிதம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குடாநாட்டின் கள நிலைவரம் குறித்து விரிவாக ஆராய்ந்தார். நேற்றுக்காலை பலாலி வந்தடைந்த கோத்தபாய ராஜபக்ஷவை, யாழ். படைகளின் தளபதி மேஜர். ஜெனரல் மகிந்த ஹத்துரு சிங்க வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து பலாலி தலைமையகத்தில் நடைபெற்ற மாநாட்டில், குடாநாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக கோத்தபாயவுக்குத் தளபதி விளக்கிக் கூறினார். அதன்பின்னர் காங்கேசன்துறைக் கடற்படை முகாமுக்குச் சென்ற கோத்தபாய, வடபிராந்திய கடற்படைத் தளபதியுடன் கலந்துரையாடி நிலைமைகளைக் கேட்டறிந்தார்.

பின்னர் யாழ். நகருக்கு விஜயம் மேற்கொண்ட பாதுகாப்புத்துறைச் செயலாளர் நல்லூர் கந்தசுவாமி கோயில், யாழ்.நாக விகாரை, யாழ்.கோட்டை, நகரப் பகுதி ஆகிய இடங்களுக்குச் சென்று நிலைமைகளை அவதானித்தார். யாழ். நகர சிவில் அலுவலகத்தில் படை அதிகாரிகள் மற்றும் படையினரு டன் கலந்துரையாடி அவர்களின் சேம நலன்களைக் கேட்டறிந்தார்.

நேற்று மாலை நயினாதீவு விகாரைக்குச் சென்ற கோத்தபாய அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டார்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com