ஜெர்மனியில் வசிக்கும் எமது அன்பார்ந்த இலங்கை தமிழ் மக்களுக்கு. எலிலன்.
இலங்கையில் நிகழ்ந்த யுத்தம் முடிவடைந்துள்ளதுடன் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் புதிய மறு மலர்ச்சியுடன் தமிழ் மக்கள் எதிர்பார்புகளுடன் வாழ ஆரம்பித்துள்ளனர். அப்பிரதேச மக்கள் தாம் விரும்பிய வண்ணம் எவருக்கும் பயமின்றி மகிழ்ச்சியுடன் வாழ்கிறர்க்ள். இங்கே நாம் விசேட கவனம் செலுத்த வேண்டிய விடயம் என்ன வென்றல் மூன்று தசாப்த காலமாக புலிகளால் தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்த வாக்குரிமை யுத்தத்தின் முடிவுடன் கிடைத்தமையாகும்.
அண்மையில் நிகழ்ந்த தேர்தல்களில் பங்குபெற்று தமக்கு விரும்பிய பிரதிநிதிகளை தேர்ந்தேடுக்கும் சந்தர்ப்பம் எமது மக்களுக்கு கிடைத்தது. எமது மக்களுக்கு கிடைத்த பூரண சுதந்திரம் பெற்றமைக்கு நல்லதொரு உதாரணமாகும். எமது தமிழ் மக்களுக்கான நல்லதோர் எதிர்கலம் உருவகிக்கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் புலம் பெயர்ந்த நாடுகளில் சம உரிமைகளுக்கான அமைப்பு என்ற பெயரில் தமிழ்மக்களின் எதிர்காலத்திற்கு முட்டுக்கட்டை போட்டு தமது சொந்த நன்மைகளுக்காக ஊர்வலம் மற்றும் பொருள்காட்சிகள் நடத்துவது கீழ்தரமான செயல் என்பதை ஜெர்மனியில் வசிக்கும் எமது தமிழ் மக்கள் அறிவார்கள் என்பது நாம் அனைவரும் அறிவோம்.
இருட்டில் இருந்து வெளிச்சத்தை கானும் எமது இலங்கை வாழ் தமிழ் மக்கள் இந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் தமது எதிர்காலத்தை ஒளிமயமாக்கிக்கொள்ள முயற்சிப்பதை விட்டு. முழுமையான பொய் பிரச்சரங்கள் செய்து உங்கள் நேரத்தையும் பணத்தையும் வீண் விரயம் செய்து நடத்தும் ஊர்வலங்கள் பொருட்காட்சிகளால் உங்களுக்கும் இலங்கையில் வாழும் எமது உறவுகளுக்கும் கிடைக்கும் நன்மை என்னா?
ஜெர்மனியில் புலம் பெயர்ந்து வாழும் எமது தமிழ் மக்களே சிந்தியுங்கள்!
நாம் சிந்திக்கவேண்டிய காலம் இது. எல்லோரும் உங்கள் சொந்த புத்தியுடன் செயல் படுங்கள். சிந்தியுங்கள் எமது உறவுகளை நிம்மதியுடன் வாழ விடுங்கள்.
எலிலன் பேர்லின்.
1 comments :
ithil sinthippathatku onrumillai. mullivaikalil emathu makkalai thudikkath htudikka kontra singal thesathudan seernthu vala entha oru suththamana thamilanum virunpamaddaan. ungaludaia kudumpam rajabaksa vukku kudai pidppathal avarkalukku pirachchanai illai. engalukkuthan pirachchanai.
thalaivan valijil nangal nadappom ungal valijil neengak nadavunkal. mudivaipparpoom. 30 varudamthan pulikalin aartchi. athatkumun een thamilarukku suthnthiram illai?
Post a Comment