இலங்கை தமிழர்களுக்கு சிமெண்ட் வழங்குகிறது இந்தியா
இலங்ககையின் வடக்குப் பகுதியில் மீள்குடியமர்த்தப்பட்ட தமிழர்கள் தங்கள் வீடுகளை கட்டிக் கொள்வதற்காக இந்திய அரசு இலவசமாக சிமெண்ட் வினியோகம் செய்கிறது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் காரணமாக இடம்பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவர்களது மறு வாழ்வுக்கு தேவையான உதவிகளை அளிக்க இந்தியா முன்வந்துள்ளது.
இலங்கை தமிழர்கள் போரில் பாதிக்கப்பட்ட தங்கள் வீடுகளை செப்பணிட்டுக் கொள்ள வசதியாக இலங்கைக்கு 45 லட்சம் சிமெண்ட் மூட்டைகளை அளிக்க இந்தியா முன்வந்துள்ளது. இதன்படி முதல்கட்டமாக அனுப்பப்பட்ட 10 ஆயிரம் சிமெண்ட் மூட்டைகள் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை இலங்கைக்கான இந்திய தூதர் அசோக் கந்தா அளித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழர்கள் மறுவாழ்வுக்கும், அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்திக் கொள்ளவும் இந்தியா உதவ முன்வந்துள்ளது என்றார். இந்தியா அளிக்கும் சிமெண்ட் ஒவ்வொரு வீட்டிற்கும் தலா 8 மூட்டை என வினியோகம் செய்யப்படும் என்றும் அதைக் கொண்டு அவர்கள் தங்கள் வீடுகளை சீரமைத்துக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார். (டிஎன்எஸ்)
0 comments :
Post a Comment