விரிவுரையாளர் ஏகாம்பரம் மகேசனின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அமீர் அலியின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் ஸ்தலத்திலேயே உயிரிழந்த கிழக்கு பல்கலைக் கழக விரிவுரையாளர் ஏகாம்பரம் மகேசனினன் பூதவுடல் அன்னாரின் வீட்டில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பிரதேச மக்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மாணவர்கள் என பெருந்தொகையானோர் அன்னாருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
47 வயதுடைய காலஞ்சென்ற மகேசன் அவர்கள் 3 குழந்தைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பிட்ட வாகனச்சாரதி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இதுவரை எவ்வித தகவல்களும் இல்லை.
0 comments :
Post a Comment