ஜனாதிபதிக்கும் பிளெக்கிற்கும் இடையில் பேச்சுவார்த்தை
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், அமெரிக்காவின் தென் ஆசிய வலய நாடுகளுக்கான பிரதி ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளெக்கிற்கும் இடையில் பூட்டானில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அண்மைய தேர்தல்கள் மற்றும் நாட்டின் ஏனைய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக எந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பது குறித்து இதுவரையில் ஊடகங்களுக்கு தகவல் வெளியிடப்படவில்லை.
தேர்தல் பின்னரான இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசாங்கம் முன்வைக்கவுள்ள தீர்வுத் திட்டம், இடம்பெயர் மக்கள் நிலைமை மற்றும் இலங்கையின் புதிய வெளியுறவுக் கொள்கை போன்றன தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கலாம் என ஊகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக மனித உரிமை மேம்பாடு, ஊடக சுதந்திரம் போன்றவை தொடர்பில் அமெரிக்கா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment