மெக்சிகோவின் மேற்குப் பகுதியில் கடும் நிலநடுக்கம்- பீதி
மெக்சிகோவின் மேற்குப் பகுதியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. மெக்சிகோவின் மேற்குப் பகுதியில் உள்ள பஜா கலிபோர்னியா என்ற பகுதியில்தான் இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதன் அளவு 7.2 ரிக்டராக பதிவாகியுள்ளது.
பூகம்பத்தின் மையப் பகுதி பஜா கலிபோர்னியாவில் இருந்த்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண எல்லையில் உள்ளது. பூகம்பத்தின் அதிர்வுகள் கலிபோர்னியாவின் தென் பகுதியில் உணரப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செலஸ், சான்டிகோ ஆகிய நகரங்களிலும் உணரப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment