முல்லைத்தீவில் கண்ணிவெடி அகற்றல் முற்றுப்பெறுகின்றது. இராணுவப் பேச்சாளர்.
புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுவந்த கண்ணிவெடி அகற்றும் பணிகள் முடிவுறும் தறுவாயில் உள்ளதாகவும், தற்சமயம் உக்கிர யுத்தம் இடம்பெற்ற ஒட்டிசுட்டான், முளங்காவில், முகமாலை ஆகிய பிரதேசங்களில் காணப்படும் மிதிவெடிகள் அகற்றப்படுவதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இப்பணியில் இராணுவத்தின் பொறியியல் பிரிவைச் சேர்ந்த 1200 பேர் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்துள்ள அவர், தமது படையினர் பிரதேச மக்களின் உடைந்த வீடுகள் , கிணறுகள் , நீர்ப்பாதைகள் என்பனவற்றையும் திருத்தி அம்மக்கள் அங்கு வாழக்கூடிய ஒர் நிலையை உருவாக்குவற்கு உரிய வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment