Monday, April 26, 2010

செக்ஸ் ஆராய்ச்சியில் ஈடுபட்டது உண்மை-நித்யானந்தா

இளம் பெண்களுடன் ஒப்பந்தம் போட்டு செக்ஸ் ஆராய்ச்சியில் ஈடுபட்டதாக கர்நாடக சி.ஐ.டி. போலீசாரிடம் நித்யானந்தா ஒப்புக் கொண்டுள்ளார். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், ஆசிரமத்துக்கு வரும் பெண்களில் என்னை முழுமையாக நம்பியவர்களிடம் நான் செக்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினேன். ஆராய்ச்சிக்காக தேவைப்படும்போது செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்றே அதில் கூறப்பட்டுள்ளது. எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் அதை பெண்கள் வெளியில் சொல்லக் கூடாது என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட பெண்களுடன் மட்டுமே, நான் செக்ஸ் வைத்துக் கொண்டேன். யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்று கூறியுள்ளார்.

சுடிதாருக்கு மாறிய நித்தியானந்தா சிஷ்யைகள்:

இந் நிலையில் நித்யானந்தா கைது செய்யப்பட்ட பிறகு பிடுதி ஆசிரமம் அடியோடு மாறி விட்டது. அங்குள்ள ஆண், பெண் சீடர்கள் காவி உடைக்குப் பதிலாக சாதாரண சுடிதார், பேன்ட், ஷர்ட்டுக்கு மாறிவிட்டனர். இந்த ஆசிரமத்தில் தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் பல மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான ஆண்கள், பெண்கள் பக்தர்கள் தங்கியுள்ளனர்.

நித்யானந்தா கைதான பிறகும் அவர்கள் தொடர்ந்து தங்கியுள்ளனர்.

முன்பு ஆண் சீடர்கள் காவி உடைந்து அணிந்தும், பெண் சீடர்கள் வெள்ளை சேலை அணிந்து இருப்பதும் தான் வழக்கம். ஆனால் நித்யானந்தா கைது செய்யப்பட்ட பிறகு பிடதி ஆசிரமம் அடியோடு மாறி விட்டது.

தற்போது ஆசிரமத்தில் இருக்கும் நித்யானந்தாவின் ஆண் சீடர்கள் காவி உடையை கழற்றி வீசி விட்டு போல் பேன்ட், சர்ட் அணிந்து வலம் வருகிறார்கள். இதேபோல் பெண் சீடர்கள் வெள்ளை சேலைகளுக்கு பதிலாக சுடிதார்களில் சுற்றி வருகின்றனர்.

நித்யாவின் அன்னிய செலாவணி மோசடி-லெனின் சாட்சியம்!
'குஜால்' சாமியார் நித்யானந்தா மீது அன்னியச் செலாவணி மோசடி வழக்கும் பதிவு செய்யப்பட உள்ளது. நித்யானந்தா மீது பாலியல் விவகாரம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்துள்ள கர்நாடக சிஐடி போலீஸார் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில்நித்யானந்தாவின் பிடுதி ஆசிரமத்தில் கடந்த வாரம் போலீஸார் பறிமுதல் செய்த கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்குகள் ஹைதராபாதில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அதில் அன்னிய செலாவணி மோசடி தொடர்பாக பல தகவல்கள் கிடைத்துள்ளன. அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தனது தியான பீட கிளை மூலம் பக்தர்களிடம் பல கோடி ரூபாய் நிதி வசூலித்து பெரும் அந்நியச் செலாவணி மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அந்நியச் செலாவணி இயக்குனரகத்துக்கு கர்நாடக சிஐடி போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நித்யானந்தா மீது அன்னியச் செலாவணி மோசடி சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவுள்ளது.

வெளிநாட்டில் டாலர்களில் பணம் பெறும்போது அதை அன்னிய செலாவணி இயக்குனரகத்துக்கு துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்ற விதியை நித்யானந்தா பின்பற்றவில்லை.

லாஸ் ஏஞ்சல்ஸ் வங்கியில் இந்தப் பணத்தைப் போட்டு அதை ஆன்லைன் டிரான்ஸ்பர் மூலம் நித்யானந்தா இந்தியாவில் உள்ள தனது வங்கிக் கணக்குகளுக்கு மாற்றிக் கொண்டுள்ளார். இதுபோல வேறு நாடுகளிலும் நித்யானந்தா மோசடி செய்துள்ளாரா என்ற விசாரணை யும் நடக்கவுள்ளது.

புலி, மான் தோலால் புது பிரச்சனை:

இந் நிலையில் அவர் புலி, மான் தோல்களை பயன்படுத்தியது தொடர்பாக கர்நாடக வனத்துறையும் வழக்குப் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளது.

லெனின் கருப்பன் சாட்சி அளித்தார்:


இதற்கிடையே நித்யானந்தாவுன் ரஞ்சிதா உல்லாசமாக இருந்த சி.டியை வெளியிட்ட லெனின் கருப்பன் இன்று பெங்களூர் சிஐடி அலுவலகத்தில் நேரில் சாட்சியம் அளித்தார்.

இன்று நீதிமன்றத்தில் ஆஜர்:

இதற்கிடையே கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்ட நித்யானந்தாவின் போலீஸ் காவல் இன்று (திங்கள்கிழமை) மாலை 5 மணியுடன் முடிவடைவதால் அவரை ராம்நகர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் போலீசார் இன்று ஆஜர்படுத்தவுள்ளனர்.

அவரிடம் விசாரணை முழுமையாக முடியாததால் மேலும் 14 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் கர்நாடக சிஐடி போலீஸார் கோரவுள்ளனர்.

முதலில் விசாரணைக்கு ஒத்துழைக்காத நித்யானந்தா இப்போது ஒத்துழைப்பு கொடுக்க ஆரம்பித்துள்ளதாக சிஐடி எஸ்.பி. யோகப்பா தெரிவித்தார். ஆனால், அவர் சரியாக உணவு உட்கொள்ள மறுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதைத் தவிர நடிகை ரஞ்சிதாவையும் நித்யானந்தாவுக்கு எதிராக போலீஸ் புகார் அளித்த லெனின் கருப்பனையும் விசாரிக்கவும் சிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com