யாழ் கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது.
யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்படுவதை கண்டித்து கைதிகளினால் ஆரம்பிக்கப்பட்டிருந்த உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நியாயமான கோரிக்கையை முன்வைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ள தங்களை எந்தத் தரப்பும் இதுவரை வந்து பார்வையிடவில்லை என்று நேற்று மதியம் ஊடகவியலாளர்களை சந்தித்த கைதிகள் தமது கவலையயும் விசனத்தையும் தெரிவித்திருக்கிறார்கள்.
இதேவேளை ஏப்ரல் மாதம் 21ம் திகதி ஆரம்பமான இந்த உண்ணாவிரதம் போரட்டத்தில் கலந்த கொண்டிருந்த கைதிகளின் தேவைகள் என்னவென சிறை ஆணையாளருக்கு தெரியபடுத்தும் முகமாக சிறைச்சாலை அதிகாரிகளால் எழுத்துமூலம் பெறப்பட்டதை அடுத்தே இந்த உண்ணாவிரதம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment