பாங்காக்கில் அவசர நிலை பிரகடனம்
பாங்காக்கில் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார் தாய்லாந்து பிரதமர் அபிஸிட் வெஜ்ஜாஜிவா. பிரதமர் அபிஸிட்டுக்கு எதிரான செஞ்சட்டை போராட்டக்காரர்கள், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்திற்குள்ளும் புகுந்து முற்றுகையிட்டனர். இதனையடுத்து உள்ளே சிக்கிக்கொண்ட அரசு மூத்த அதிகாரிகள் மற்றும் எம்.பி.க்களை ஹெலிகாப்டர் மூலம் அரசு மீட்டது.
இந்நிலையில், போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பாங்காக்கில் அவசர நிலையை பிரகடனம் செய்து, பிரதமர் அவரது இந்த உத்தரவைத் தொடர்ந்து அபிஸிட் இன்று உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தி சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான பொறுப்பை இராணுவத்தினர் எடுத்துக்கொண்டுள்ளனர்.
நகர் முழுவதும் இராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment