பாலித்த ரங்கபண்டாரவிற்கு மேலதிக வைத்திய சிகிச்சை : ஜனாதிபதி உத்தரவு.
புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக அதிகூடிய விருப்பு வாக்குகளுடன் அதிகூடிய விருப்பு வாக்குகளுடன் பாரளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பாலித்த ரங்கபண்டார கட்சியின் சகவேட்பாளர் ஒருவரால் தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலையில் பலத்த காயமடைந்துள்ள அவருக்கு கையில் மூன்று விரல்கள் வாள்வெட்டினால் துண்டாடப்பட்டுள்ளதுடன், கையொன்று முறிந்தும், இருப்புக் கம்பியினால் அடித்ததில் காலில் பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அவருக்கு வெளிநாட்டிலோ அன்றி உள்நாட்டிலோ மேலதிக சிகிச்சை அவசியமாயின் அவற்றை வழங்க ஜனாதிபதி தயாராக இருப்பதாக பா.உ ரங்கபண்டாரவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தில் இரு பாராளுன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். விருப்பு வாக்குகளில் 3ம் இடத்தில் உள்ள சாந்த அபயசேகர என்பவரே ரங்க பண்டார மீது தாக்குதல் தொடுத்துள்ளதுடன் அவரும் அவருடைய சகாக்கள் நால்வரும் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 23 ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
விருப்புவாக்குகளில் 3ம் இடத்திலுள்ள வேட்பாளரான கைது செய்யப்பட்டுள்ளவர் ரங்க பண்டாரவை அடித்துக்கொன்று விட்டு பாராளுமன்றம் செல்ல முயன்றாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதுடன், அவர் மீது கொலை முயற்றி குற்றம் சுமத்தப்படலாம் எனவும் நம்பப்படுகின்றது.
0 comments :
Post a Comment