Saturday, April 24, 2010

சம்பந்தனின் கருத்தினை வரவேற்கிறோம் - அரசாங்கம்

ஒரே இலங்கைக்குள் தீர்வுத்திட்டம் தொடர்பாக கலந்துரையாட தயராக இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதை வரவேற்பதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. கொழும்பில் அமைந்துள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டளஸ் அழஹப்பெரும இக்கருத்தினை வெளியிட்டார்.

தமிழ் தரப்பிலிருந்து கடந்த 30, 40 வருடங்களில் கிடைக்கபெற்ற சிறந்த சமிக்ஞை இதுவென தெரிவித்துள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் டலஸ் அழஹப்பெரும அவர்களுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்துமாறு கட்சியின் சிரேஷ்ட்ட உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

சார்க் சம்மேளனம் நிறைவடைந்த பின்னர் இந்த கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்படும் எனவும் யுத்தம் கொழுந்துவிட்டு எரிந்த நாட்டில் மீண்டும் யுத்தம் நடைபெறாத பின்னணியை ஏற்படுத்த வேண்டியது எமது அனைவரினதும் பொறுப்பு என அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com