ஐ.தே.மு வேட்பாளர் கைது. வாகனத்தில் கைத்துப்பாக்கி.
ஐக்கிய தேசிய முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர்களில் ஒருவரான கின்டல்பிட்டிய மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் ஒருவருடன் இரகசியமான சட்டவிரோ தொடர்பு தொடர்பாக பெண் செய்த முறைப்பாட்டை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மிரிகான பகுதியில் வாகனமொன்றில் பயணம் செய்தபோது அவரை கைது செய்துள்ள பொலிஸார் அவரது வாகனத்திலிருந்து A7.62 ரக கைத்துப்பாக்கி ஒன்றை கைப்பற்றியுள்ளனர். வாகனத்தின் சாரதியாக கடற்படையிலிருந்து தப்பியோடியிருந்த சிப்பாய் ஒருவர் இருந்துள்ளதுடன் அவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
எம்.டி.வி-சிரச ஊடகவலையமைப்பின் முன்னாள் செய்திப் பணிப்பளரான சுசில் கிந்தல்பிட்டிய எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.
எம்.டி.வி சிரச ஊடகவலையமைப்பு கடந்த சில காலமாக ஆளுந்தரப்பு அரசியல்வாதிகளின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகிவந்துள்ளதுடன் சில தடவைகள் தாக்குதல்களுக்கும் உள்ளாகியுள்ளது.
இதேவேளை வேட்பாளர் சுசில் கிந்தல்பிட்டியவின் கைது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள, ஐக்கிய தேசியக்கட்சியின் மற்றுமொரு கொழும்பு மாவட்ட வேட்பாளரான ரவி கருணாநாயக்க, இதனை ஒரு அரசியல் பழிவாங்கல் என குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகளை பல்வேறு வழிகளிலும் ஒடுக்கும் முயற்சிகளே மேற்கொள்ளப்படுவதாக ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
0 comments :
Post a Comment