தமிழ் மக்களின் ஒருவாக்கு கூட ஐ.தே.க கிடையாதவாறு செயற்படுவோம். பிரபா கணேசன்.
ஐக்கிய தேசிய முன்னணியில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றுக்கு தெரிவாகியுள்ள ஜனநாயக மக்கள் முன்னணியைச் சேர்ந்த பிரபா கணேசன் , தேசியப் பட்டியல் பாராளுன்ற உறுப்பினர் விவகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தமது கட்சியை ஏமாற்றி விட்டதாக தெரிவித்துள்ளதுடன் , இதன் பிரகாரம் அம்முன்னணியிலிருந்து வெளியேறி தான் பாராளுமன்றில் சுயேட்சையாக செயல்படபோவதாகவும் , எதிர்காலத்தில் கொழும்பு மாவட்டத்தில் மட்டுமல்ல நாடுபூராகவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு வாக்கு தன்னும் கிடைக்காதவாறு செயற்படுவோம் என தெரிவித்துள்ளார்.
அதேநேரம் நுவரேலிய மாவட்டதிலிருந்து ஐக்கிய தேசிய முன்னணி ஊடாக பாராளுமன்றுக்கு தெரிவாகியுள்ள திகாம்பரம் அவர்களும் பாராளுமன்றில் சுயமாக இயங்கப்போவதாக தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
1 comments :
What a shame ! UNP would have been a good party if his brother got into the parliament.Now both the brothers talk rubbish politics about UNP.Voters of Srilanka are very clever and not fools to dance according to your tune.There are many ways serve the nation not only as a MP.
Post a Comment