Friday, April 23, 2010

போகல்லாகம லண்டன் தூதுவரா?

முன்னாள் வெளிவிகார அமைச்சரும் கடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளவருமான றோகித்த போகல்லாகம அவர்கள் பிரித்தானியாவிற்கான தூதுவராக நியமனம் பெறுவதற்காக முயற்சித்து வருவதாக தெரியவருகின்றது. தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்று நுழைய முற்பட்ட அவர் அம்முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து பிரித்தானியாவுக்கான தூதுவராக தன்னை நியமிக்குமாறு ஜனாதிபதியை வேண்டியுள்ளார். இவ்வியடத்தினை அறிந்த பல வாழ் பெரும்பாண்மையின மக்கள் அவரது முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆதே நேரம் வெளிவிகார அமைச்சராக டாக்டர் சரத் அமுனுகம அல்லது ஜீ.எல் பிரீஸ் நியமிக்கப்படலாம் என தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com