Thursday, April 22, 2010

விமல் வீரவன்சவின் கட்சியினுள் மீண்டும் பிளவா?

ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) விலிருந்து பிரிந்து சென்ற விமல் வீரவன்சவின் தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி எனும் அமைப்பினுள் மீண்டுமோர் பிளவு ஏற்பட சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்துள்ள தேர்தலில் நாடு பூராகவும் விமல் வீரவன்ச 17 வேட்பாளர்களை நிறுத்தியபோதும் கொழும்பு மாவட்டத்திலிருந்து விமல் வீரவன்சவும், அனுராதபுரத்திலிருந்து வீரகுமார திஸாநாயகவும் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டுள்னர். இத்தோல்விக்கு விமல் வீரவன்சவின் செயற்பாடுகளே காரணம் என கட்சி உறுப்பினர்கள் வீரவன்சவை குற்றஞ்சுமத்துவதாகவும் கட்சியினுள் பல பிளவுகள் ஏற்பட வாய்புகள் உருவாகியுள்ளதாகவும் தெரியவருகின்றது. அதே நேரம் விமல் வீரவன்ச கட்சிக்காக கிடைத்த பணத்தில் பெரும்பகுதியை தனக்கான விருப்பு வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக செலவிட்டதாகவும் பிற உறுப்பினர்களுக்கான தேர்தல் பிரச்சாரங்களுக்கு உதவவில்லை எனவும் பேசப்படுகின்றது.

மறுபுறத்தில் விமல் வீரவன்ச தேசியப் பட்டியலில் தனது கட்சிக்கு இரு ஆசனங்களை ஒதுக்கி தருமாறு ஜனாதிபதி மற்றும் அவரது சகோதரர் பசில் ராஜபக்ச ஆகியோருடன் இறுதி நேரம் வரை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோதும் அம்முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. ஜனாதிபதியுடன் அவர் இறுதியாக பேசியபோது ' நானே முடிவுகளை எடுப்பவன், எனது முடிவே இறுதியானது, அவ் முடிவுகளை ஏற்க முடியாதவர்கள் உடனடியாக வெளியேற முடியும், நான் அவற்றை பற்றி கவலைப்படபோவதில்லை' என மிகவும் கடும் தொனியில் கூறியதாக ஜேவிபி சார்பு இணையத்தளம் ஒன்று விமல் வீரவன்சவிற்கு நெருக்கமான வட்டாரங்களை ஆதாரங்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

விமல் வீரவன்சவினால் இரு தேசியப் பட்டியல் கோரப்பட்டதில் ஒன்று கடந்த ஜனாதிபதி தேர்தலில் மிகவும் சர்சைக்குரிய நபராக காணப்பட்ட முசம்மிலுக்கு வழங்கப்படவிருந்ததாக தெரியவருகின்றது. அதே நேரம் வழங்கப்பட்டுள்ள ஒரு ஆசனம் வீரவன்சவின் சகாவாகவிருந்தாலும் அவரும் எதிர்காலத்தில் வீரவன்சவுடன் இருந்து பிரிந்து சென்று அரசுடன் இணைந்து கொண்ட நந்தன குணத்திலக போன்று அரசுடன் இணைந்து கொள்வார் என அரசியல் வாட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com