சாரா மாலினி பெரேரா பிணையில் விடுதலை.
புத்த மதத்திலிருந்து விலகி இஸ்லாத்தை தழுவியிருந்த இலங்கைப் பெண்ணொருவர் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டடிருந்தார். சாரா மாலினி பெரேரா என்ற மேற்படி பெண் இன்று நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
வளைகுடா நாடான பஹ்ரெய்னை வதிவிடமாகக் கொண்ட இந்தப் பெண், தனது மத மாற்றம் பற்றி அண்மையில் இரண்டு நூல்களை சிங்களத்தில் எழுதியிருந்தார். இந்தப் பெண், இஸ்லாம் மதத்தை மற்ற மதங்களுடன் ஒப்பிட்டு இரண்டு நூல்களை அண்மையில் வெளியிட்டதாகவும், அவற்றில் ஒன்றான 'இருளிலிருந்து ஒளியை நோக்கி' என்ற நூலில், தான் எதற்காக தனது மதநம்பிக்கையை மாற்றிக்கொண்டார் என்று எழுதப்பட்டிருந்தாக கூறப்படுகின்றது.
0 comments :
Post a Comment