புலி தலைவர்களை நாடு கடத்தியமைக்காக கோத்தபாய மலேசியாவிற்கு நன்றி தெரிவிப்பு.
சமீபத்தில் கோலாலம்பூரில் நடந்த சர்வதேச பாதுகாப்புத்துறை கண்காட்சியில் கலந்து கொண்ட இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இலங்கையில் யுத்தம் முடிவடைந்த தருணத்தில் மலேசியாவில் நுழைந்த புலிகளின் தலைவர்களை கைது செய்து நாடு கடத்தியமைக்காக மலேசிய அரசை மிகவும் பாராட்டினார். ஆனால் நாடு கடத்தப்பட்டவர்கள் யார், யார் என்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை.
பிரபாகரன் கொல்லப்பட்ட பிறகு, மலேசியாவுக்கு அடைக்கலம் தேடி வந்த விடுதலைப் புலி தலைவர்கள் பலரை கைது செய்து, நாடு கடத்தினோம் என்று மலேசிய உள்துறை அமைச்சர் ஹிஷாமுதீன் {ஹசைன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த சண்டையில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அந்த நாடு அறிவித்தது. அந்த போருக்குப் பிறகு 2009ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துக்கும் கடந்த மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் ஏராளமான பேர் அகதிகளாக அடைக்கலம் தேடி வந்தனர். அவர்களை கைது செய்து, நாடு கடத்தி விட்டோம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment