நோர்வே இலங்கையினுள் மீண்டும் மூக்கை நுழைக்க முயல்கின்றது.
இலங்கையில் தற்போது உருவாகியுள்ள அரசியல் சூழ்நிலை வரவேற்கத்தக்கதென அறிவித்துள்ள நோர்வே அரசு, இலங்கையில் அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் அண்மையில் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் ராஜபக்சவின் கட்சிக்கு அமோக வெற்றி கிட்டியுள்ளதாக தெரிவித்துள்ள நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜொனஸ் கார்ஸ்டோர், கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் இடம்பெயர் மக்களுக்காக இலங்கை அரசு பல்வேறு நலத் திட்டங்களை மேற்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வுத் திட்டமொன்றை வழங்கும் முனைப்புக்களுக்கு நோர்வே அரசாங்கத்தினால் ஒத்துழைப்பு வழங்க முடியும் என ஜொனஸ் குறிப்பிட்டுள்ளார் என தகவல்கள் தெரிவித்துள்ளன.
0 comments :
Post a Comment