Thursday, April 8, 2010

வாக்களிப்பு நிறைவு பெற்றுள்ளது.

7 வது பாராளுமன்றுக்கான வாக்களிப்பு குறிப்பிடத்தக்களவு வன்முறைகளுடன் நிறைவு பெற்றுள்ளது. தேர்தலில் எத்தனை விழுக்காடு வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்பது தேர்தல் முடிவுகள் வெளியாகும்போதே தெரிவிக்கப்படும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஆதேநேரம் 50 - 52 % வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் ஆங்காங்கே தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றிருந்தாலும் வட-கிழக்கு பிரதேசங்களில் எவ்வித வன்முறைகளும் இடம்பெற்றிருக்கவில்லை என தெரியவருகின்றது. அதே நேரம் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் வடகிழக்கில் குறைந்தளவு வாக்கு விகிதமே அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாவலப்பிட்டி உட்பட பல பிரதேசங்களில் வாக்குச்சாவடிக்குச் சென்றிருந்த யுஎன்பி மற்றும் டிஎன்ஏ ஆகிய கட்சிகளின் முகவர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுமதிக்கப்படாமல் விரட்டியடிக்கப்பட்டதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக சுயாதீன தேர்தல் கண்காணிப்புக் குழுவான பவ்ரல் தேர்தல் ஆணையாளரைச் சந்தித்து பேசியதாக அவ்வமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் தேர்தல் நிலையங்களில் கடமையிலிருந்த ஊழியர்கள் வாக்காளர்களின் வாக்குச் சீட்டுக்களின் பின்புறத்தில் வாக்காளர் இலக்கங்களை பதிவு செய்ததாக கூறப்படுகின்றது. இச்செயற்பாடானது வாக்காளர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தனர் என்பதை கண்டுபிடிப்பதற்கான செயற்பாடு எனவும் சட்டவிரோதமானது எனவும் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டு தேர்தல் திணைக்களத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் இவ்விடயம் சட்டவிரோதமானது அல்ல எனவும் தெரிவித்துள்ளனர்:


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com