பிரான்சில் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை
பிரான்சில் பொது இடங்களில் பெண்கள் முகத்தையும், உடலையும் மறைக்கும் வகையில் பர்தா அணிவதை தடை செய்யும் சட்டம் கொண்டுவர அந்த நாட்டின் அதிபர் சர்கோசி உத்தரவிட்டு இருக்கிறார். இது பற்றி அரசாங்க செய்தி தொடர்பாளர் சாட்டேல் கூறுகையில், கடந்த புதன்கிழமை நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பர்தா அணிவதை தடை செய்யும் சட்டம் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
வருகிற மே மாதம் இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் எனறு சர்கோசி உத்தரவிட்டு இருக்கிறார். பர்தா பெண்களின் கண்ணியத்துக்கு பங்கம் விளைவிப்பதால் இந்த தடை கொண்டுவரப்படுகிறது என்றார் சாட்டேல்.
0 comments :
Post a Comment