மதுபோதையில் கடமையிலிருந்த பொலிஸார் பதவியிழப்பு.
புத்தளம் பிரதேசத்தில் வாக்கெடுப்பு நிலையம் ஒன்றில் கடமையிலிருந்த பொலிஸார் மதுபாணம் அருந்தியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதுடன் அவர் அவ்விடத்தில் வைத்தே சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். யாழ்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் மக்களுக்காக நாகவில்லும முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் சாவடி நிலையத்திற்கு பிரதேச பொலிஸ் மா அதிபர் சோதனைக்காக சென்றபோது மேற்படி பொலிஸ் கொஸ்தாபல் மாட்டியுள்ளார்.
அவ்விடத்திலேயே அவர் பிரதி பொலிஸ் மா அதிபரால் பதவிநீக்கம் செய்யப்பட்டதாக தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment