முன்னாள் புலிகளை பார்வையிட அனுமதி வழங்கப்படவில்லை என்கிறது ஐ.நா.
இலங்கையின் வடக்கே வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த மற்றும் சிறைப்பிடிக்கப்பட்ட சுமார் 11000 முன்னாள் புலிகளியக்க உறுப்பினர்கள் பல்வேறு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வுறுப்பினர்களை பார்வையிட தமது ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என ஐநா கவலை வெளியிட்டுள்ளது.
ஐநா பேச்சாளர் அட்ரெச் மஹோசிக், 'இலங்கைத் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப் பட்டிருந்த மக்கள் பலர் இப்போது விடுவிக்கப்பட்ட போதும் விடுதலைப் புலிகளைத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குச் சென்று பார்வையிடுவதற்கு அனுமதி அளிக்காதது கவலைக்குரிய அம்சம்,' என அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, ஐநா அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலாளர் லின் போஸ்கோ, இலங்கையின் நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக அடுத்த மாத நடுப் பகுதியில் இங்;கு வர அனுமதிக்கும்படி அந்த அமைப்பு அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளது.
0 comments :
Post a Comment