இலங்கையர் ஒருவர் அமெரிக்க சிறையில்
அமெரிக்காவில் தற்போது வசித்துவரும் இலங்கையைச் சேர்ந்த அசோக பெரேரா என்பவர் அமெரிக்காவில் பணமோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறை வைக்கப்பட்டுள்ளார். 31 வருடங்களாக சிக்காகோ பகுதியில் 4ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி கற்பித்துவந்த நான்சி ஸ்மித் என்பவருடன் இலங்கையைச் சேர்ந்த அசோக பெரேரா என்பவர் நண்பராக பழகிவந்துள்ளார். காலப்போக்கில் தனது நண்பியான நான்சியிடமிருந்து முறைகேடான விதத்தில் அசோக 300,000 அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளார்.
இதனையடுத்து பணமோசடி செய்த குற்றத்திற்காக அசோக கைதுசெய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார். நான்சியின் வயது இப்போது 82 என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment