ஜெனரல் பொன்சேகா பாராளுமன்று செல்வதை நீதிபதிகளே தீர்மானிப்பர். ஹூலுகல்ல
ஜெனரரல் சரத் பொன்சேகா நாடாளுமன்றம் செல்வதை தடுக்க இலங்கை அரசு முயற்சிப்பதாக பொன்சேகாவின் கட்சியான ஜனநாயக தேசிய முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது. இக்குற்றச்சாட்டினை அரசதரப்பினர் முற்றாக மறுதலித்துள்ளனர். இது தொடர்பாக கருத்துக்கூறிய தேசிய பாதுகாப்புக்கான மத்திய நிலையத்தின் இயக்குனர் லக்ஸ்மல் குலுகல்ல அரசாங்கம் அவ்வாறன எவ்வித முயற்சிகளிலும் ஈடுபடவில்லை எனவும் தீர்ப்புகள் நீதிபதிகளின் கையிலேயே உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
ஆதேநேரம் ஜெனரல் பாராளுன்றம் செல்வதை அரசாசாங்கம் தடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்வதாக தெரிவித்த ஜனநாயக தேசிய முன்னணியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான அநுரகுமார திஸாநாயக்கவே கூறுகையில், பொன்சேகா இந்த மாதம் 22 ஆம் தேதி நாடாளுமன்றம் செல்வதைத் தடுப்பதற்காக வரும் 19 ஆம் தேதி திங்கட்கிழமையன்றே, இராணுவ நீதிமன்றத்தில் அவருக்குத் தண்டனை வழங்கி, அவரை நிரந்தரமாக உள்ளே அடைத்து வைக்க அரசு முயற்சி செய்கின்றது என்றார்.
பொன்சேகா கைதுசெய்யப்பட்ட சம்பவம் உட்பட அவர் தொடர்பாக அரசு அடுத்தடுத்து மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் சட்டவிரோதமானவை. ஆயுதங்கள் கொள்வனவு செய்த குற்றச்சாட்டின் கீழ் பொன்சேகாவை விசாரணை செய்வதற்காக இரண்டாவது நீதிமன்றம் மார்ச் மாதம் ஆறாம் தேதி கூடிக் கலைந்தது.
இந்த விசாரணைக்காக நியமிக்கப்பட்டிருக்கும் நீதிபதிகளை நீதிபதிகளாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று அன்றைய தினம் நாம் கூறி அதற்கான காரணங்களையும் முன்வைத்தோம். நீதிபதிகளுள் ஒருவரான மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க, அப்போது புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார். அவர்களுக்கு வாகனங்களை வழங்கியிருந்தார். அதற்கான ஆதாரங்களை எமது வழக்கறிஞர்கள் முன்வைத்தனர்.
அடுத்த நீதிபதியான மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், முன்பு மேஜர் ஜெனரல் பன்னிப்பிட்டிய இராணுவ நீதிமன்ற விசாரணைக் குட்படுத்தப்பட்டபோது அவருக்கு எதிராகப் பொய்ச் சாட்சியமளித்தவர். அதற்கான ஆதாரங்களையும் நாம் சமர்ப்பித்தோம். இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க எம்மிடம் சாட்சியாளர்கள் உள்ளனர். அவர்களின் பெயர்ப் பட்டியலை நாம் சமர்ப்பித்துள்ளோம்.
அந்தப் பெயர்ப்பட்டியலில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விடயங்கள் அவருக்கு நன்கு தெரியும். இந்த நிலையில் இந்த மாதம் 19 ஆம் திகதி மீண்டும் இராணுவ நீதிமன்றம் கூடுகின்றது. பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராவதைத் தடுக்கும் நோக்கில் அரசு செயற்பட்டது. அந்த முயற்சி தோற்றுப்போனது.
இப்போது, அவர் நாடாளுமன்றம் வருவதைத் தடுக்கும் நோக்கில் அரசு செயற்படத் தொடங்கியுள்ளது. அதன் காரணமாகவே இந்த மாதம் 19 ஆம் தேதி இராணுவ நீதிமன்றம் கூட்டப்படுகின்றது. பொன்சேகாவுக்கு அன்றைய தினம் தண்டனை வழங்கி அவரை உள்ளே தள்ளி அவர் நாடாளுமன்றம் வருவதைத் தடுப்பதே அரசின் ஒரே நோக்கம்.இதற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழவேண்டும்.
பொன்சேகா கைதுசெய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட, அதனைத் தொடர்ந்து அவர் தொடர்பாக அரசால் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் சட்ட விரோதமானவையாகவே அமைந்துள்ளன என்றார்.
இதனிடையே பொன்சேகா நாடாளுமன்றத்திற்கு செல்ல அனுமதிக்குமாறு இராணுவத்தளபதியிடம் ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இக்கோரிக்கை தொடர்பாக கூறிய இராணுவப் பேச்சாளர் ஜெனரல் பொன்சேகாவை பாராளுமன்றம் அனுமதிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஆனால் ஜெனரல் பொன்சேகாவை பாராளுமன்றம் அனுமதிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவையில்லை எனவும் கடற்படை தலைமையகத்தில் அவரது தடுப்புக்காவலுக்கு பொறுப்பான அதிகாரி அவரை விடுவிக்க முடியும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment