பின்லேடனை பிடிப்பதோ அல்லது கொல்வதோதான் அமெரிக்காவின் முன்னுரிமை
அல் - காய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ஒஸாமா பின்லேடனை உயிருடன் பிடிப்பதோ அல்லது கொல்வதோதான் அமெரிக்காவின் முதல் முன்னுரிமை என்று அந்நாடு தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனை தெரிவித்த வெள்ளை மாளிகை ஊடக செயலர் ராபர்ட் கிப்ஸ், பின்லேடனை அமெரிக்கா உயிருடன் பிடிக்கவோ அல்லது கொல்லவோ செய்யும் என்றார்.
அல் - காய்தா இயக்கத்தின் பல உயர்மட்ட தலைவர்களை கைது செய்ததன் மூலம் அந்த இயக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதில் அமெரிக்காவுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
0 comments :
Post a Comment