Thursday, April 22, 2010

ஊடகவியலாளர்கள் படுகொலை: தண்டனை வழங்காத நாடுகளின் பட்டியலில் இலங்கை .

ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு காரணமானவர்களுக்கு தண்டனை வழங்காத நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம் பெற்றுள்ளது. அதிகளவில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டது மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகளை மேற்கொண்டவர்கள், தண்டனைகளில் இருந்து தப்பிக்கும் நாடுகளின் பட்டியலை நியூயார்க்கை தளமாக கொண்டு இயங்கும் ஊடகவியலாளர் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது.

இதில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர்களை படுகொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அரசுகளுக்கு நாம் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்து வருகிறோம்.அரசுகளும் எமக்கு உறுதிமொழிகளை வழங்கி வருகின்றன.

ஆனால் அரசுகள் தமது உறுதிமொழிகளை நிறைவேற்றும் வரை இந்த இந்த வன்முறைகளை நிறுத்த முடியாது.2000 ஆம் ஆண்டில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரையிலும் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகளை நாம் கருத்தில் எடுத்துள்ளோம்.

ஐந்துக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படாததை நாம் குறைந்த பட்ச அளவீடாக கணிப்பிட்டுள்ளோம்.

இந்த வருடம் ஈராக், இலங்கை, சோமாலியா, பிலிப்பைன்ஸ்,கொலம்பியா, ஆப்கானிஸ்தான், நேபாளம், ரஷ்யா,மெக்சிகோ, பங்களாதேஷ், இந்தியா ஆகிய 12 நாடுகளை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம் என்று அந்த அமைப்பு மேலும் கூறியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com