அரசியல் யாப்பில் மாற்றம் : ஜனாதிபதியாக மூன்று தடவை நிலைக்க முடியும்.
இலங்கையில் அரசியல் யாப்பில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தச் சட்டத்திருத்தங்களின் படி அதிபர் ஒருவர் இருதடவைளே பதவி வக்கிக்கமுடியும் என்ற வரையறையில் மாற்றம் ஏற்படுத்தி அதை மூன்று தடவை பதவி வகிக்க முடியும் என வரையறுக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தச் சட்டத் திருத்தத்தை மிக முக்கியமானதாக் கருதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அரசமைப்புச் சட்ட மாற்றங்கள் அடுத்த மாதத்துக்குள் நிறைவேற்றப் படும் என்று மூத்த அரசியல்வாதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த மாற்றம் இப்போதைய அதிபர் ராஜபக்சே மூன்றாவது தடவை அந்தப் பதவியை ஏற்பதற்கு வகை செய்வதற்காக இடம்பெறவில்லை. நாட்டின் ஜனநாயகத்தையும், உறுதித் தன்மையையும் ஏற்படுத்தவே இடம் பெறுகிறது என்று தன் பெயரை வெளியிட விரும்பாத மூத்த அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டதாக சிங்களத் செய்தித்தாள் ஒன்று தெரிவிக்கின்றது.
இப்போதைய அதிபர் ராஜபக்சே, இரண்டாவது தடவையாக அந்தப் பதவியை ஏற்று இருக்கிறார். இலங்கையின் இப்போதைய அரமைப்புச் சட்டத்தின்படி ஒருவர் இரண்டு தடவைதான் அதிபர் பதவியை வகிக்க முடியும். இரண்டாவது தவணையாக அதிபராகி இருக்கும் ராஜபக்சே வரும் நவம்பரில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வார்.
அதற்கு முன்னதாக அரசமைப்புச் சட்ட மாற்றங்களை அமுலாக்குவதற்கு ஏதவான நடவடிக்கைகள் இடம்பெறும் என்று அந்த அமைச்சர் கூறினார்.
0 comments :
Post a Comment