ரஜீவ் கொலைக்கு கண்டனம் தெரிவித்துவிட்டு பார்வதி இந்தியா வரட்டும் சுப்.சுவாமி
மலேசியாவிலிருந்து சென்னை வந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியை மீண்டும் மலேசியாவுக்கே திருப்பி அனுப்பியது சரியான நடவடிக்கையே என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரபாகரனின் தாயார் பார்வதியை இந்தியாவுக்குள் அனுமதிக்க மறுத்த இந்திய அரசின் நடவடிக்கை மிகவும் சரியானது என்று கூறியுள்ளார்.
யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வந்து, தங்கி செல்ல இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல என்றும் ராஜீவ் காந்தியை கொன்றதற்காக பார்வதி முதலில் கண்டனம் தெரிவிக்கட்டும். அதன்பிறகு அவரை இந்தியாவுக்குள் அனுமதிப்பது பற்றி பிறகு பரிசீலிக்கலாம் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
மலேசியாவில் வீசா முடிவடைந்த நிலையில் இந்தியா சென்ற அவரை இந்தியா மீண்டும் மலேசியாவிற்கே திருப்பியனுப்பியிருந்தது. இந்நிலையில் அவருக்கு அங்கு மேலும் ஒருமாதத்திற்கு தங்குவதற்கு வீசா வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
...............................
0 comments :
Post a Comment