தலைமை மீது குற்றஞ்சுமத்தவது நியாயமற்றது. டாக்டர் ஜெயலத்
ஐக்கிய தேசியக் கட்சி கடந்த தேர்தலில் பலத்த தோல்வியை தளுவியதை அடுத்து கட்சியினுள் பல குளப்பங்கள் தோன்றி தலைமை மீது பலர் குற்றஞ்சுமத்தியுள்ள நிலையில், தேர்தல் தோல்விக்காக தலைமையை குற்றஞ்சாட்டுவது நியாயமற்றது என அக்கட்சியின் முன்னணி உறுப்பிர்களில் ஒருவரும் கம்பகா மாவட்ட பா.உறுப்பினருமாகிய டாக்டர் ஜெயலத் ஜெயவர்த்தனா தெரிவித்துள்ளார். அத்துடன் கட்சியின் அங்கத்தவர்களாகிய நாம் அனைவரும் எமது கடமைகளை திறம்படச் செய்திருக்கின்றோமா என்பதை மீள் பரிசீலினை செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேநேரம் கட்சியின் நிர்வாக கட்டமைப்பு முதல் தலைமைப்பீடம் வரை மாற்றியமைக்கப்பட வேண்டும் என சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment