கனடா குருத்வாரா அருகே மோதல் : சீக்கியர்கள் மூன்று பேர் கைது.
கனடாவில், குருத்வாரா அருகே சீக்கியர்களுக்கிடையே நடந்த மோதலில், நான்கு பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கனடாவின், Brampton (Toronto) பகுதியில் சீக்கியர்களின் புனித இடமான குருத்வாரா அமைந்துள்ளது. நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு வழிபாடு நடத்துவதற்காக சென்றிருந்தனர். அப்போது, அவர்களில் இரு பிரிவினர்களிடையே திடீர் என மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, ஒருவரையொருவர் ஆயுதங்களால் தாக்கிக் கொண்டதில் நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டது. சம்பவ இடம் சென்ற போலீசார், இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்து, அவர்களிடமிருந்த ஆயுதங்களையும் கைப்பற்றினர். இதுகுறித்து, மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ வன்முறை சம்பவங்களை அனுமதிக்க முடியாது, சட்ட விரோதமாக யார் நடந்து கொண்டாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
0 comments :
Post a Comment