காணமல்போன ஊடகவியலாளர் தொடர்பாக சாத்திரம் கேட்கச் சொல்லும் பொலிஸார்.
கடந்த 2 மாதங்களுக்கு மேலாக காணாமல் போயுள்ள லங்காஈநியூஸ் பத்திரிகையாளரான எக்கலியகொடவின் மனைவி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு சென்றபோது, உங்கள் கணவனுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக சாத்திரி ஒருவரிடம் கேட்டுப்பார்க்க வில்லையா என அங்கிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் வினவியுள்ளார். கடந்த 6ம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு சென்ற தன்னிடம் மேற்கண்டவாறு அங்கிருந்த அதிகாரி ஒருவர் வினவியதாக ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள எக்கலியகொடவின் மனைவி தனது கணவின் காணமல்போய் இன்றுடன் 77 நாட்கள் சென்றுள்ளதாகவும் இதுவரை எவ்வித தகவல்களும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment