பிரிட்டனில் புதிதாக பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்ட அமைப்புக்கு ஆப்பு.
விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி எனும் அமைப்பொன்று பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவ்வமைப்பின் சின்னமாக புலிச்சின்னம் பிரித்தானிய அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்திருந்த நிலையில் குறிப்பிட்ட அமைப்பை பதிவு செய்வது தொடர்பான பரிசீலினைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய நாளேடு ஒன்று தெரிவிக்கின்றது.
இது தொடர்பாக அந்நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில், தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளுடன் இந்தக் கட்சிக்குள்ள தொடர்பு குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும், அதுவரை கட்சியின் பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கட்சியின் பதிவு முற்றுப்பெறாத நிலையில் தமக்கே உரித்தான பொய்பிரச்சாரத்தில் ஈடுபட்ட புலிகள் தாம் பிரித்தானியாவில் குறிப்பிட்ட கட்சியில் தேர்தலில் குதிக்கவுள்ளதாகவும் புலுடாக்களை அவிட்டு விட்டிருந்தனர்.
ஓருவர் பிறருக்கு சொந்தமான கடனட்டையை கூடவே இருந்து சுட்டுக்கொண்டு சென்று ஏரிஎம் மெசினில் போட்டு ஒரு முறை இருமுறை பணம் எடுக்கலாம். ஆனால் காட்பறிபோன விடயம் தெரிந்தவுடன் உடையவன் வங்கிக்கு சொன்னவுடனேயே காட் வேலை செய்யாது. அதேமாதிரி புலிகள் இவ்வாறு போலிகளை கொண்டுபோவதும் பின்னர் ஒன்றும் இல்லாமல் பல்லை இழித்துக்கொண்டு நிற்பதும் கடந்த 30 ஆண்டுகளாக நடந்தே வருகின்றது. எனவே இவ்விடயத்தோடாவது இவர்கள் மக்களை ஏமாற்றுவதை நிறுத்துவார்களா
0 comments :
Post a Comment