அரசியல்வாதி ஒருவரின் எடுபிடிகள் பொலிஸார் மீது தாக்குதல். ஒருவர் வைத்தியசாலையில்.
தம்புட்டேகம பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் நால்வர் அரசியல்வாதி ஒருவரின் எடுபிடிகளின் தாக்குதலுக்குட்பட்டுள்ளனர். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாகவும். ராஜாங்கண பிரதேசத்தில் வீடு ஒன்று தீமூட்டப்பட்டுள்ளதாக பொலிஸ் அவசர சேவைக்கு நேற்றிரவு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் எரிந்து கொண்டிருந்த வீட்டின் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு விரைந்த அரசியல்வாதி ஒருவரின் எடுபிடிகள் பொலிஸார் மீது கண்மூடித்தனமான தாக்குதலை தொடுத்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான பொலிஸார் ஒருவர் தம்புட்டேகம பொலிஸ் நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகள் தொடர்வாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment