அரசுடன் பேசத்தயாராகவுள்ளோம் - சம்பந்தன்
அழைப்பு விடுக்கப்பட்டால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்படக் கூடிய சாத்தியங்களை முழுமையாக மறுக்க முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கக் கூடிய எந்தவொரு தீர்வுத் திட்டத்தையும் தமது கட்சி எதிர்க்காது என அவர் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் தொடர்பிலான மக்கள் அதிருப்தி காரணமாகவே அநேகமானோர் வாக்களிக்கத் தவறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் பாராளுமன்றில் மூன்றாவது பெரும்பான்மை பலமுடைய கட்சியாக தமது கட்சி திகழும் என சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழர் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டால், அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பல கோரிக்கைகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அவர் தெரிவித்துள்ளார். இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்றம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். உயர்பாதுகாப்பு வலயங்கள் நிறுவப்பட்டுள்ள காரணத்தினால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நீண்ட காலமாக இடம்பெயர்ந்து .
0 comments :
Post a Comment