Wednesday, April 7, 2010

கானளதனளகமடகனடபளகனமத- ஏயெம்.ஹஸன் அலி

இன்று சித்திரை ஏழு - இன்றும்
இன்னும் நாளை மட்டும்
இருட்ட முன் நான்கு மணி வரை
இரப்பார் யாசகனாய்!

நாளை இருட்டி பின் வெளித்ததும்
நான் யாரோ நீர் யாரோ
நான் எம் பீ ஆகி விட்டிருப்பேன்
நாளை நீ எனக்கு - யாரோ ஆகி விட்டிருப்பாய்!

கொலைஞர் பயமிருந்தும்
கொட்டக் கொட்ட விழித்து
கொடி கட்டியும் போஸ்டர் ஒட்டியும்
கொள்கைக்காய் கூவியலைந்தோம்!

அரசியல் - சாக்கடையென்றார்
அதில் நெளியும் புழு இவரென்றார்
அத்தனையும் எதிர்த்தோம்
அந்தவொரு கொள்கைக்காய்!

இல்லையென்று அடம் பிடித்தேன்
இவர் தங்கமென்றும் நானுரைத்தேன்
இகத்தினில் இவர் மட்டும்
இல்லாதோர்க் கினியவர் என்றேன்!

பொய்யென்று நிரூபிப்பார் நாளை
பொறுமையோடு கொஞ்சமிரு
பொக்கட் நிரப்ப தொழில் செய்வார்
பொறுக்கி எடுத்த எம் வாக்குகளால்!

வக்கற்றுப் போய் - முதலில்லா
வறுமைக்குள் போன இவர்
வாக்கெனும் முதலீட்டை
வந்தெம்மிடம் பிச்செயெடுத்தார்!

தொழில் செய்ய தெரிந்தவர்
தொகைப்பணமோ கையிலில்லை
தொப்பி மாலை போட்டல்லோ
தொட்டி பட்டியெல்லாம் தெருநாயாய்...!

எமக்குச் சேவை செய்வாரென
எடுத்தியம்பி பின் அலைந்தோம்
எப்படி மாறி விட்டார்
எடுத்தெறிந்து குரைக்கின்றார்!

செய் நன்றி மறப்பார்
சொரணையற்று களவெடுப்பார்
செருப்பாய் உழைத்தோர்க்கும்
செருக்காய் பதிலிறுப்பார்!

இவர் கொஞ்சம் பறவாயில்லை
இன்னொரு ஜாதி உண்டு - இச்சாக்கடையில்
இவரை யா (நா) யென்றே தெரியாது
இழிச்ச வாயர்களாய் இலவச பிரவேசம்!

கூட்டிக் கொடுத்தாரோ - இல்லை
கூத்தியாள் கொடுத்தாளோ
கூட்டில் கல்லெறிய - குடிகார
கூட்டம் அமைத்தாரோ!

பாவமெங்கள் ஊராக்கள்
பாவியிவன் சொல் கேட்டு
பாழ் கிணற்றில் வீழ்ந்திட்டார்
பகடைதான் வரும் அஞ்சாறு வருஷமும்.

ஓதிப் படியா மண்டுவெல்லாம்
ஓட்டெடுத்து ஜெயிக்கையிலே
ஓவென்று புகழுள்ள – ஒரு சிலர்
ஒதுங்கி ஓளிவதேனோ!

மனம் நொந்து மனம் நொந்து
மாற்றானிடம் முறையிடுவேம் - அவர்
மா மனிதராய் மலர்ந்திடுவார்
'ம்... 'லெற்ஸ் தெ ரைம் ஆன்ஸர் என்று'


-ஏயெம்.ஹஸன் அலி
சவூதியிலிருந்து

கவிதைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது VII

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com