ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியை பலப்படுத்துவோம் - அமைச்சர் பேரியல்.
தாய்நாட்டுக்கும் மக்களுக்கும் அர்ப்பணி ப்புடன் பணியாற்றும் ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷவின் ஆட்சியை பலப்படுத்தும் மீண்டுமொரு சந்தர்ப்பத்தினை திகாமடுல்ல மாவட்ட மக்கள் பொதுத்தேர்தலினூடாக வழங்க வேண்டும். வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சர் பேரியல் அஷ்ரஃப் இவ்வாறு பேசுகையில் கூறினார்.
அட்டாளைச்சேனை பிரதான வீதியில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எஸ். எல். சனூஸ் தலைமையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர் உரை யாற்றினார். இக்கூட்டத்தில் வேட்பாளர் ஏ. எம். எம். நெளஷாட், கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி அபுல் கலாம், ஹிபத்துல் கரீம், நவாஸ் செளபி ஆகியோரும் உரையாற்றினர்
அமைச்சர் பேரியல் அஷ்ரஃப் மேலும் கூறியதாவது :-
முன்னாள் ஜனாதிபதி அமரர் ஜே. ஆர். ஜெயவர்த்தனா மறைந்த தலைவர் அஷ்ரபிடம் கேட்ட கேள்வியொன்றே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தோற்றம் பெறுவதற்கு பிரதான காரணமாக அமைந்தது என்பதை எவரும் மறந்திருக்க முடியாது.
வடக்கு கிழக்கு இணைப்பின் போது முஸ்லிம்கள் குறித்து சட்டத்தரணி பதவி வகித்த மர்ஹும் அஷ்ரஃப் ஜனாதிபதி ஜெயவர்த்தனவிடம் கேட்ட கேள்வி அவரை வியப்படையச் செய்ததுடன் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது. முஸ்லிம்கள் குறித்து கேள்வியெழுப்புவதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் இருக்கும் போது உனக்கென்ன தேவை எனக் கேட்டார். இவ்வாறான கேள்விகளுக்கு நாங்கள் இடமளிக்கக் கூடாது.
Thanks Thinakaran.
0 comments :
Post a Comment